இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் எனவும், இது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 600 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் அதே போன்றதொரு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஒப் அஸ்ட்ரோபிசிக்ஸ் பேராசிரியர் விஜோத் கே. கவுர், நிலநடுக்கம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத கட்டிட தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் இவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே உயிரிழப்புக்கள் பெருமளவில் தவிர்க்கப்படும் எனவும்ம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வரக்கூடிய பேரழிவில் இருந்து மக்களை காக்க தேவையான ஏற்பாடுகளை உத்திரகாண்ட் அரசு மேற்கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் வழியுறுத்தி உள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகங்கள் இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு உதவ தயாராக உள்ளதாகவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.