உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவின் லன்காஷியர் பகுதியில் 70 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் இருந்து மீட்பு

பிரித்தானியாவில் லன்காஷியர் (Lancashire   )  பகுதியில்  வெள்ளத்தில் சிக்கிய 70இற்கும்  மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவின்  லன்காஷியா ; மற்றும் கல்கேற்   பகுதிகள் மோசமான காலநிலை   காரணமாக  மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  குறித்த பிரதேசங்களில் இருந்து  500க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் கிடைத்துள்ளதாகவும்    அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெள்ளம் காரணமாக வேல்ஸின் வடக்குப் பகுதியில் வீதிகள் மற்றும்  புகையிரத தண்டவாளங்கள்   நீரில் மூழ்கியுள்ளதனால்    போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதேவேளை  வடக்கு வேல்ஸ் பகுதியின் எட்டு பிரதேசங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்  புகையிரதங்களுக்கு   வேகத்தினைக் குறைத்து ஓட்டுமாறும் கோரப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap