இலங்கை பிரதான செய்திகள்

அடித்தால் எரிப்பார்களா ? அப்ப அடித்தது சரியா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

அடித்தால் எரிப்பார்களா ? அப்ப அடித்தது சரியா ? என வடமாகாண சபை அவைத்தலைவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் நீண்ட வாதம் இடம்பெற்றது.

வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது அவைத்தலைவர் ஜிந்தோட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் வன்முறையாளர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் அவசர பிரேரரனை ஒன்றினை முன் வைத்தார்.

அதற்கு எதிர்கட்சி தலைவர் குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் எமக்கு பூரணமாக தெரியாமல் நாம் அவசரப்பட்டு இந்த பிரேரணையை கொண்டு வர தேவையில்லை என கருத்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அவைத்தலைவருக்கும் எதிர்க்கட்சி தலைவரும் கேள்வி கேட்டு விவாதம் நடத்தினார்கள்.

அவைத்தலைவர் :- எது அவசரப்பட்டு கொண்டு வரப்பட்டது ? சம்பவம் நடந்து இப்ப எத்தனை நாள் ?

எதிர்க்கட்சி தலைவர் :- இந்த பிரேரணை மூலம் அவசரப்பட்டு கண்டனம் தெரிவிக்க தேவையில்லை.

அ . த. :- அவசர பிரேரரனை என்றால் அவசரப்பட்டு தான் கொண்டு வர வேண்டும்.

எ . த. :- இந்த வன்முறைக்கு காரணம் ஒரு விபத்து சம்பவம் எனவும் , விபத்துக்கு உள்ளன ஒருவரை தாக்கியதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை எனவும் கூறப்படுகின்றது.

அ. த. :- அடித்தால் எரிப்பார்களா ?

எ.த . :- அப்ப அடித்தது சரியா ? இது திட்டமிட்டு நடந்ததாக தெரியவில்லை.

அ. த. :- விபத்து நடந்து இரண்டு நாளுக்கு பின்னர் வன்முறை நடந்துள்ளது. அது திட்டமிட்டது இல்லையா ?

எ . த. :- விபத்தை ஏற்படுத்தியவரை அடித்ததால் ஏற்பட்ட வன்முறை.

அ. த. :- அது பற்றி தேவையில்லை அடித்தால் எரிப்பார்களா ?

எ.த . :- சம்பவம் தொடர்பில் முழுமையாக தெரியாமல் ஒரு பக்க சார்பாக கண்டிக்க முடியாது. அதற்கு நான் உடன்பட மாட்டேன். என் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.

அ . த. :- நீங்கள் எப்பவும் எதையாவது பதிவு செய்வீர்கள் தானே ? எதிர்ப்பையும் பதிவு செய்யுங்கள். உங்கள் எதிர்ப்பும் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவைத்தலைவருக்கும் , எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் நீண்ட விவாதம் முடிவுக்கு வந்த பின்னர் முதலமைச்சர் குறித்த பிரேரணையை அடுத்த அமர்வுக்கு ஒத்தி வைப்பது நல்லது என தோன்றுவதாக தெரிவித்தார்.

அதனை அடுத்து குறித்த பிரேரணையை எடுத்த அமர்வுக்கு ஒத்தி வைக்க அவைத்தலைவர் சம்மதித்து ஒத்திவைத்தார்.

2 Comments

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கு அனுமதி மறுத்தவர் ஜிந்தோட்டை சம்பவத்திற்க்கு ஊளையிடுகின்றார், விரும்பினால் உமது இரங்கலை தனிப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டியது தானே , மாவீரர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கலாம் என்று ஊளையிடத் தெரிந்த முன்னாள் மாநகர சபை ஊழல் பேர்வழிக்கு இது மட்டும் தெரியாதோ, குறுக்கு வழியில் முதலமைச்சர் பதவியை அடைவதற்க்கு நாக்கை தொங்க போட்டுக்கொண்டுதிரிபவரே உமது காக்கைவன்னியன் கூட்டத்தைகொண்டு பாராளுமன்றில் இரங்கல் தீர்மானத்தை கொண்டு வரவேண்டியது தானே, ராஜன்.

 • வடமாகாணசபை உருவாக்கப்பட்ட நாளிலிருந்து செய்த சாதனைகள்.
  1.பிரேரணைகள் நிறைவேற்றல்.
  2.அறிக்கைகள் விடுதல்.
  3.சபையை குழப்புதல்.
  4.வெளிநடப்பு செய்தல்.
  5.அடிக்கடி அமைச்சரவை மாற்றம்.