குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிங்கள மக்களை மட்டும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை கிடையாது எனவும் சிறுபான்மை சமூகத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கம் செயற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிங்தொட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் கேள்வி எழுப்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களிடமிருந்து வாக்கு மூலங்கள் பதியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் காவல்துறையினர் வாக்கு மூலங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Add Comment