குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் ஒரு தொகை பணமும் யாழ்ப்பாண காவல்துறையினரினால் மீட்கப்பட்டு உள்ளது. கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டனர்.
அதன் போது , குறித்த வீட்டில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் , ஒரு தொகை பணத்தினையும் ; கைப்பற்றிய காவல்துறையினர் வீட்டில் இருந்து குடும்ப பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். குறித்த பெண் திருமணமான நிலையில் கணவனை பிரிந்து வாழ்பவர் எனவும் , பெண்ணுக்கு கஞ்சாவை விநியோகிப்பவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.