இந்தியா

கந்துவட்டி அன்புசெழியனை கைதுசெய்ய பெங்களூருக்கு தனிப்படையை அனுப்பியது தமிழக அரசு :


தமிழகத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலையுடன் தொடர்புடைய வழக்கில் தேடப்பட்டுவரும் கந்துவட்டி கடன் வழங்குனர் அன்புசெழியனை கைது செய்ய, பெங்களூருக்கு தமிழகத்தின் தனிப்படை காவல்துறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்துக்கொண்டார். தனது தற்கொலைக்கு கந்துவட்டி கடன் வழங்குனர் அன்புசெழியனே காரணம் என்று அசோக்குமார் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில் கந்துவட்டி அன்புசெழியன் தலைமறைவாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது, அவரை கைது செய்வதற்காக மதுரை சென்றபோது, தனது குடும்பத்தினருடன் அன்புசெழியன் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள நண்பர்கள் வீட்டில், அன்புச்செழியன் பதுங்கியிருப்பதாக தமிழக அரசுக்கு தகவல் கிடைத்த நிலையில் அவரை கைது செய்ய தமிழக தனிப்படை காவல்துறையினர் சென்றுள்ளனர்.

இதேவேளை அன்புச்செழியனின் கடவுச்சீட்டு, அடையான அட்டை போன்றவை கிடைக்கப்பெறாமையால் அவரை கைது செய்வதில் காவல்துறை சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply