163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவிற்கு பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கத் தயார் என சீனா அறிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள், சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட்டின் ஆதரவாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளனர். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.
சிரியாவின் புனரமைப்புப் பணிகளுக்கு சர்வதேச சமூகம் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பினை வழங்க வேண்டும் எனவும், சீனா அதற்கு ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் இந்த உதவிகள் வரவேற்கப்பட வேண்டியவை என சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love