குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய கிழக்கின் ஹிட்லராக ஈரானிய தலைவர் அயதுல்லா அல் கொமெய்னி செயற்பட்டு வருவதாக சவூதி அரேபியா குற்றம் சுமத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மான் ( mohammed bin salman ) இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஐரோப்பாவில் இடம்பெற்ற சம்பவங்கள் மத்திய கிழக்கில் இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் ஹிட்லர் செயற்பட்டதனைப் போன்று மத்திய கிழக்கில் ஈரானிய தலைவர் கொமெய்னி செயற்பட்டு வருவதாகவும் இதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சவூதி இளவரசரின் கருத்துக்களுக்கு ஈரான் இதுவரையில் உத்தியோகபூர்வமாக பதில் எதனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.