208
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் 3 கிலோ கிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் இன்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர். ‘யாழ்ப்பாணம் பிரதிக் காவல்துறைமா அதிபரின் சிறப்பு குற்றத்தடுப்பு காவல்துறைனரின் சோதனையின் போதே சந்தேகநபரின் உடமையிலிருந்து கஞ்சா மீட்கப்பட்டது.
புத்தூரைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.நீதிமன்ற நடவடிக்கைக்காக சந்தேகநபர் அச்சுவேலிக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சான்றுப்பொருளும் அச்சுவேலி காவல் நிலையத்தில் கையளிக்கப்பட்டது எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
Spread the love