குளோபல் தமிழ்செய்தியாளர்
சிரியாவில், ரஸ்ய படையினர் நடத்திய தாக்குதல்களில் 53 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் அல் சாபா என்னும் இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரஸ்ய படையினர் பொதுமக்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
53 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உயிரிழப்புச் சேத விபரங்கள் மேலும் உயர்வடைந்துள்தளாகக் குறிப்பிடப்படுகிறது. சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட்டிற்கு ரஸ்யா பூரண ஆதரவினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் மத்தியஸ்ததுடன் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஜெனீவாவில் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.