Home உலகம் ஆஷஸ் போட்டித் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா இலகு வெற்றி

ஆஷஸ் போட்டித் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா இலகு வெற்றி

by admin

குளோபல் தமிழ்செய்தியாளர்
ஆஷஸ் டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலகு வெற்றியீட்டியுள்ளது. அவுஸ்திரேலிய அணி முதல் போட்டியில் பத்து விக்கட்டுகளினால் வெற்றியீட்டியுள்ளது.  அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாதடியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 302 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 195 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸ் விக்கட் இழப்பின்றி 173 ஓட்டங்களையும் பெற்றக் கொண்டு வெற்றியீட்டியது. போட்டியில் அபராத சதமொன்றை அடித்து அவுஸ்திரேலிய அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். இதன்படி, ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கின்றது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More