யுத்த காலத்தில் மன்னார் பகுதியில் கடற்புலித் தலைவராக இருந்த தியாகவராசா அருள்செல்வம் என்பவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான நேற்றையதினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதனை சந்தித்த அவர், தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார் எனவும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அவர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை இனப்பிரச்சினைக்கு ஆர்.சம்பந்தன் ஊடாகவே தீர்வு பெற்றுக் கொள்ள முடியும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1985ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை கடற்புலித் தலைவராக இருந்த அருள்செல்வம் கைதுசெய்யப்பட்டு, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் 2012ம் ஆண்டு சமூகத்ததுடன் இணைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.