184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேவின் பிறந்த நாள் அந்நாட்டு தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் பெப்ரவரி மாதம் 21ம் திகதி ரொபர்ட் முகாவே தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட உள்ளது.
போராட்டங்கள் மற்றும் இராணுவத் தலையீடு காரணமாக முகாபே கடந்த வாரம் தனது பதவிவிலகியிருந்தார். இதனைத் தொடர்ந்து எம்மர்சன் நாங்காவா ( Emmerson Mnangagwa ) ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த வாரத்தில் புதிய ஜனாதிபதி எம்மர்சன் அமைச்சரவையை நிறுவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love