Home உலகம்சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் பிறந்த நாள் அந்நாட்டு தேசிய விடுமுறையாக அறிவிப்பு

சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் பிறந்த நாள் அந்நாட்டு தேசிய விடுமுறையாக அறிவிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேவின் பிறந்த நாள் அந்நாட்டு தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் பெப்ரவரி மாதம் 21ம் திகதி ரொபர்ட் முகாவே தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட உள்ளது.

போராட்டங்கள் மற்றும் இராணுவத் தலையீடு காரணமாக முகாபே கடந்த வாரம் தனது பதவிவிலகியிருந்தார்.  இதனைத் தொடர்ந்து எம்மர்சன் நாங்காவா   (  Emmerson Mnangagwa ) ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த வாரத்தில் புதிய ஜனாதிபதி   எம்மர்சன்     அமைச்சரவையை நிறுவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More