169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய இளவசரர் ஹரி அடுத்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள உள்ளார். அமெரிக்க நடிகையான மெகான் மெர்கலை, இளவரசர் ஹரி கரம் பிடிக்க உள்ளார். கடந்த 2016ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் பற்றி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். தயாரான மறைந்த இளவரசி டயனாவிற்கு சொந்தமான இரண்டு இரத்தினக் கற்களைக் கொண்ட ஓர் மோதிரத்தை ஹரி, மெகலுக்கு பரிசாக வழங்கியுள்ளார். திருண திகதி பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love