173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு விலகினால் மட்டுமே கட்சிக்குள் ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி கூட்டு அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விலகினால் மட்டுமே சுதந்திரக் கட்சியில் ஒற்றுமையை உறுதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love