குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையாளிகளை பாதுகாப்பதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். கொலையாளி தப்பிச் செல்வதனை தடுப்பதற்கு அரசாங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த கொலையாளியை மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். சந்தேக நபரை மீட்டு காவல்துறையினரிடம் ; ஒப்படைக்கப்பட்டிருக்காவிட்டால் அவர் கொல்லப்பட்டிருப்பார் என தெரிவித்துள்ளார். வித்தியா கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment