தமிழகத்தில் சென்னை பெரம்பூர் எஸ் 2 திரையரங்க உரிமையாளர் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரித் துறையினர் இருவாரங்களுக்கு முன் சோதனை நடத்தியிருந்தனர். இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பட்டேல், மார்க், மிலன், கங்கா உள்ளிட்ட வணிக நிறுவன குழுமங்கள் சார்ந்த 33 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரம்பூர் ஸ்பெக்டரம் மால் சத்யம் எஸ்2 திரையரங்க உரிமையாளர் வீட்டிலும் அவரது குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது