ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சந்தைப்பகுதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதலை ஐஎஸ் அமைப்பினர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் ஐ.எஸ். அமைப்பினருக்கும், ஈராக் இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் சனநெருக்கடியான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை ஐந்து தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதில் மூன்று தீவிரவாதி்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது