நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு நல்ல குறிக்கோள்கள் இருப்பதுடன் அவற்றை முனைப்புடன் செயற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க தெரிவித்துள்ளனர்.
எண்ணங்கள் தனியொருவரை மட்டும் வளர்ப்பதற்கில்லை எனவும் எமது குறிக்கோள்கள் எதிர்கால நோக்கம் கருதியதாக வேண்டும் எனவும் தெரிவித்த அவர் நல்ல குறிக்கோள்களை செயற்படுத்த தெளிவான வேலைத்திட்டங்கள் இருக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமூகத்துக்கு நல்ல குறிக்கோள்களையும், திட்டங்களையும் நடைமுறைப்படுத்த நல்ல தலைவர்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் எல்லா மட்டங்களில் வாழும் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளும் தலைவர்கள் இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிலர் யுத்தத்தை வெற்றிகொண்டதால் நாட்டை விலைக்கு கேட்கின்றார்கள் எனத் தெரிவித்த அவர் யுத்தத்தில் வெற்றியை மாத்திரமல்லாது நாட்டை சீரழித்த நிலையையும் பார்க்கவேண்டும் எனத் தெரிவித்தார்.