158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இ.போ.சவின் வடபிராந்திய பேருந்து சேவைகள் நாளை புதன்கிழமையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்புத் தலையகத்தில் இன்று மாலை இடம்பெற்ற பேச்சு வெற்றியளிக்காததால் இந்த அறிவிப்பை தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியது.
Spread the love