Home இலங்கைசாவகச்சேரி கல்வயலில் 3 வீடுகளில் ஒரே இரவில் கொள்ளை

சாவகச்சேரி கல்வயலில் 3 வீடுகளில் ஒரே இரவில் கொள்ளை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சாவகச்சேரி கல்வயல் சண்முகானந்தா வீதியில் ஒரே இரவில் மூன்று வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் எனக் காவல்துறையினர்  தெரிவித்தனர்.

மூன்று வீடுகளிலும் முன் கதவுகளைக் கூரிய ஆயுதம் ஒன்றால் திறந்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவங்கள் இன்று  செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளன.

கல்வயல் புலுட்டையன் பிள்ளையார் கோவில் கணக்காளரின் வீட்டில் 16 பவுண் நகைகளும் மற்றைய இரு வீடுகளிலும் சேர்த்து மொத்தமாக 20 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் மூன்று வீடுகளிலும்  காவல்துறையினர்   சோதனைகள் நடத்தியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More