186
குளோபல் தமிழச் செய்தியாளர்
இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரங்கன ஹேரத் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹேரத்திற்கு பதிலீடாக லெக் ஸ்பின் பந்து வீச்சாளர் ஜிப்ரி வென்டர்சே களமிறக்கப்பட உள்ளார். வென்டர்சே இதுவரையில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேரத்தின் இழப்பு இலங்கை அணியை பெரிதும் பாதிக:கும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love