சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை செய்து கொண்டிருப்பது சீன ராணுவ வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீன ராணுவத்தின் மிக உயர்ந்த அதிகாரம் மிகுந்த அமைப்பான மத்திய ராணுவ ஆணைக்குழுவின்; தலைவரான 66 வயதான ஜாங் யாங் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மத்திய ராணுவ ஆணைக்குழுவில் துணைத்தலைவர்களாக பணியாற்றி, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கடந்த வருடம் வெளியேற்றப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஜாங் யாங மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை..
151
Spread the love