Home இலங்கைஇக்ரம் உள்ளடங்கலாக மூவர் கைது:-

இக்ரம் உள்ளடங்கலாக மூவர் கைது:-

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டுவிட்டு கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என  காவல்துறை தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. காவல்துறையினரால்  தேடப்பட்டுவந்த முஸ்லிம் இளைஞன்  என நம்பப்படும் இக்ரம்  உள்ளடங்களாக மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே அவர்களைக் கைது செய்தது. சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு யாழ்ப்பாணம்  காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம் பெறுகின்றன. அவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர் எனவும் காவல்துறை   தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More