137
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரிய அணுவாயுத விவகாரம் தொடர்பில் தென்கொரியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதி Moon Jae-in மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வடகொரிய அணுவாயுத விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கைக்கான கடனுதவியை அதிகரிப்பதற்கு தென்கொரியா உறுதியளித்துள்ளது. தெற்காசிய நாடுகளுடனான உறவுகளை விஸ்தரிப்பதற்கு விரும்புவதாக தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Spread the love