157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும், இந்த நிலையிலும் அரசாங்கத்தை விட்டு சுதந்திரக்கட்சி வெளியேறப் போவதில்லை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென சுதந்திரக்கட்சிக்கு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்து வருகின்றது.
இதேவேளை, அரசாங்கத்தை விட்டு சுதந்திரக்கட்சி விலகாவிட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது என கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love