177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலையகத்தின் பல பகுதிகளில் மரம் முறிந்து வீழ்தல், வெள்ளம் மற்றும் மண்சரிவு என அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்றைய தினம் முதல் பெய்து வரும் கடும் மழையினால் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. டயகம, நோர்வூட், பொகவந்தலாவ, நோர்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் சீரற்ற காலநிலையினால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை, கடுமையான மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
Spread the love