குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் இதுவரையில் ஐந்து பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தாழமுக்க நிலைமை இலங்கையை நகர்ந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அம்பலாங்கொட, தொடந்தூவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கிரிபத்கொட மற்றும் மடோல்சீம பகுதிகளிலிருந்து இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். வாகனங்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் இவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு:-
Nov 30, 2017 @ 05:11
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆறு ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் கடுமையான காற்றுடன் பெய்து வரும் பலத்த மழையுடன் கூடிய காலநிலையினால் இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மரம் முறிந்து வீழ்ந்தல், மண்சரிவு, கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது என இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. கிரிபத்கொட, மடோசீகம, பண்டாரவள மற்றும் அம்பலாங்கொட, ஹிக்கடுவ கடற்பரப்பில் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஹிக்கடுவ கடல் ஊடாக மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.