Home இலங்கைவடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பால் நோய்ப் பிரிவு நிபுணத்துவ மருத்துவர் பிரியந்த படகல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் வட மாகாணத்தில் எட்டு எயிட்ஸ் நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர் எனவும், இதில் 36 பேர் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எயிட்ஸ் நோய் தொடர்பில் போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், நோய் பரவுவதனை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2016ம் ஆண்டில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More