வயாவிளானில் ஒட்டகபுலம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் சென். அன்ரனிஸ் தேவாலயம் உட்பட மக்களின் 27 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டது. காணி விடுவித்ததற்கான உறுதிச்சான்றிதழை யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்தார். இந்நிகழ்வு அன்ரனிஸ் தேவாலயத்தில் இடம்பெற்றது.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் வீடுகள் உடைந்த நிலையில் காணப்படுவதுடன் காணிகளை இனங்காணமுடியாத முடியாத நிலையில் பெரிய மரங்கள், பற்றைகள் காணப்படுகின்றன. அத்துடன் இங்குள்ள பாடசாலை தேவாலயம் என்பனவும் சேதமடைந்து காணப்படுகின்றது.
அதேவேளை ஏனைய மீதி காணிகள் அடுத்த 2 மாதங்களில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் படங்கள் :- நிருஜன் செல்வநாயகம்.