Home இலங்கைவடபிராந்திய போக்குவரத்துச் சபையின் போராட்டம் கைவிடப்பட்டது

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் போராட்டம் கைவிடப்பட்டது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவவை அந்தப் பதவியிலிருந்து உடனடியாக இடம்மாற்றப்படும். வடபிராந்திய பிரதான முகாமையாளராக கேதீஸ் நியமிக்கப்படுவார்’ என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைமையகம் இன்று நண்பகல் வாக்குறுதி வழங்கியது.

இதனையடுத்து வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கம் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், போக்குவரத்துச் சபையின் தலைவருடன் இன்று காலை நடத்திய பேச்சுக்களை அடுத்தே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டதாக வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கம் தெரிவித்தது.
0

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More