குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரில் இன்று காலை விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலையின் முகப்பிலிருந்து ஆரம்பமான நடைபவனி ஹற்றன் நசனல் வங்கி வீதியூடாக விக்ரோரியா வீதியூடாக சென்று மீண்டும் வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி நெறிக் கல்லூரியில் முடிவடைந்தது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கும் நோய் காரணியான எச்.ஜ.வி நோய்த் தொற்று இலங்கையிலும் காணப்படுகின்றது. இந்த நோய்த் தொற்று தாக்கமானது வருடத்துக்கு 250 பேர் என்ற கணக்கில் நாட்டில் அதிகரித்து செல்வதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் எச்.ஐ.வி நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுபடுத்தவும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவே இந்த விழிப்புணர்வு நடைபவனி ஒழுங்கமைக்கப்பட்டது என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவு மருத்துவ வல்லுநர் பிரியந்த பட்டெகல்ல தெரிவித்தார்.