பிரித்தானியாவில் 13 வயது பாடசாலைச் சிறுமி ஒருவரைக் காப்பாற்றிய இந்தியாவைச் சேர்ந்த கார் சாரதி ஒருவருக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்க உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரக்ஸி சாரதியாக செயற்பட்டு வரும் சட்பீர் அரோரா என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் குறித்த சிறுமியை அவரது வீட்டிலிருந்து புகையிரத நிலையம் ஒன்றில் இறக்கி விட்டுள்ளார். குறித்த புகையிரதநிலையத்தில் யாரும் இல்லாததால் சந்தேகமடைந்த அரோரா விசாரித்த போது சிறுமி சரியான முறையில் பதிலளிக்காமையினால் சிறுமி தொலைபேசியில் உரையாடியதனை பதிவு செய்ததுடன் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட நடத்திய விசாரணையில் சிறுமியை சாம் ஹெவிங்ஸ் என்பவர் கடத்துவதற்கு திட்டம் தீட்டியிருந்தமை தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றொரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், அரோராவின் செயலை பாராட்டி அவருக்கு சிறந்த பாதுகாவலர் என்ற சான்றிதழை வழங்கி உள்ளதாக அப்பகுதி கவுன்சிலர் அறிவித்துள்ளார்.