குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதியின் நடவடி;ககை பிழையானது என பிரித்தானிய பிரதமர் திரேசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானிய British far-right group இன் டுவிட் பதிவிற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் பதில் டுவிட் இட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் அமெரிக்காவுடான உறவுகள் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்படுவதனால் அமெரிக்காவின் எல்லா நடவடிக்கைகளையும் அமோதிக்க வேண்டும் என அர்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் டுவிட் பதிவு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.