155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகாவிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேவிற்கும் இடையில் பாராளுமன்றில் வாக்குவாத நிலைமை ஏற்பட்டுள்ளது. காமினி லொக்குகே, சரத் பொன்சேகாவை பாராளுமன்றில் வைத்து விமர்சனம் செய்திருந்தார். இருவரும் தகாத வார்த்தைகளினால் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டுள்ளனர்.
இந்த தருணத்தில் பாராளுமன்றின் அவைத் தலைவராக செயற்பட்ட பிமல் ரட்நாயக்க, பாராளுமன்றின் நன்மதிப்பை சீர்குலைக்க வேண்டாம் என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Spread the love