அம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று அவர் தலதாமாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதோடு அஸகிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமை பிக்குகளை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்ட நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிற் பாதுகாப்பு தெடர்பாக தான் தனிப்பட்ட முறையில் சீன நிறுவனத்துடன் பேசியுள்ளதாகவும் ஓருவரை கூட தொழிலில் இருந்து நீக்க வேண்டாம் எனக் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று அந்த அமைச்சு தனக்குரியதல்ல என்றபோதிலும் தனது கருத்தில் உறுதியாக இருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுமாயின் தான் அரசாங்கத்தில் இருந்தவாரே அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பேன் எனவும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.