285
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
கிளிநொச்சி பூநகரி குடமுருட்டிக் குளத்தினை முழுமையானப் புனரமைப்பிற்கு உட்படுத்துமாறு இக்குளத்தின் கீழான விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளம் முழுமையான புனரமைப்பு மேற்கொள்ளப்படாததன் காரணமாக பயிர்ச் செய்கை காலங்களில் குளத்தின் அணைக்கட்டில் துவாரங்கள் ஏற்பட்டு மண் மூடைகள் அடுக்குவதும் மண் கொண்டு துவாரங்களை மூடுவதும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமது கிராமத்தில் நடைபெற்ற விவசாயக் கூட்டங்களில் குளத்தினை முழுமையாகப் புனரமைக்குமாறு கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றோம். ஆனால் புனரமைப்புகள் நடைபெறவில்லை. எனவே குளத்தினை முழுமையாகப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றோம்.
இறுதியாக நடைபெற்ற பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் இவ்வாண்டில் கரியாலைநாகபடுவான்குளம், குடமுருட்டிக்குளம் என்பவற்றில் எவ்விதமான புனரமைப்புப் பணிகளும் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குடமுருட்டி குளத்தின் நீர் கொள்லளவு எட்டு அடி ஒன்பது அங்குலம் தற்போது ஏழு அடி நீர் காணப்படுகிறது. இந்தக் குளம் முழுமையாக புனரமைப்புச் செய்யுமிடத்து விவசாய நடவடிக்கைகளையும் விரிவுப்படுத்த முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love