குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியின் அமைச்சர் பீ.ஹரிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எல்லை நிர்ணயம் குறித்த மனு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து பெப்ரவரி மாதத்தில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.