180
யாழ் சாவகச்சேரி பகுதியில் முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு இனந்தெரியாத நபர்கள் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை குறித்த ஊடகவியலாளர் சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவரது வாகனத்தை மறித்த இனந்தெரியாத நபர்கள் இருவர் அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் முச்சக்கர வண்டியில் வந்து தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதனைத் தடுக்க முற்பட்டவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Spread the love