நடிகை அம்பிகா டிராபிக் ராமசாமி மூலம் தனது கனவு நிறைவேறியிருக்கின்றதென தெரிவித்துள்ளார். தான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும் சென்டிமென்ட் கலந்த நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது தனது நீண்ட நாள் ஆசையாக, கனவாக இருந்து கொண்டிருந்தது எனவும் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் மூலம் அந்தக்கனவு நிறைவேறி இருக்கிறது எனவும் நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
30 வருடங்களுக்கு முன்னர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் ஒரு வக்கீல் வேடத்தில் நடித்திருந்ததாகவும் தற்பொழுது அவரின் இயக்கத்தில் ‘டிராபிக் ராமசாமி’ என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதில் கதையோடு கலந்த நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் இது மிகவும் புதுமையான மாறுபட்ட நடிப்பு அனுபவமாக இருந்தது எனவும் அந்த வகையில் தன் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை விஜய் விக்ரம் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது