குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பஹாமாஸில் நடைபெற்ற கொல்ப் போட்டியில் பிரபல வீரர் டைகர் வுட்ஸ் இணை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பல உபாதைகளின் பின்னர் வுட்ஸ் மீண்டும் கொல்ப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னமும் தாம் ஓர் வலுவான வீரர் என்பதனை பறைசாற்றும் வகையில் வுட்ஸ் ஹீரோ வேல்ட் சலன்ஜ் ( Hero World Challenge ) போட்டித் தொடரில் இணை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் ரிக்கி ப்ளோரும் இணை சம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 41 வயதான வுட்ஸ் அபரா திறமைகளை வெளிப்படுத்தி இந்தப் போட்டித் தொடரில் இணை சம்பியன் பட்டத்தை வென்றெடுத்துள்ளார். 2018ம் ஆண்டு போட்டித் தொடர்களுக்கான ஆயத்தங்களை தாம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பஹாமாஸில் நடைபெற்ற கொல்ப் போட்டியில் டைகர் வுட்ஸிற்கு இணை சம்பியன் பட்டம்
160
Spread the love
previous post