குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மால்டா ஊடகவியலாளர் டாப்னே க்யுரானா கலீலியா ( Daphne Caruana Galizia)வின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வுச் செய்தியாளரான டாப்னே அண்மையில் கார் குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு இலக்காகி கொல்லப்பட்டார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட முக்கிய அரசியல்வாதிகளை காலிசியா விமர்சனம் செய்து பதிவுகளை இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலை தொடர்பிலான தகவல்களை வழங்குவோருக்கு ஒரு மில்லியன் யூரோக்களை சன்மானமாக வழங்குவதாக மால்டா அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த விருது வழங்கப்படுவோர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், இந்த விருது வழங்கும் நிகழ்வு அடுத்த ஆண்டு பக்கிங்ஹாம் மாளிகையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலை குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்காவின் எப்.பி.ஐ உளவுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் உதவிகள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.