குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
மன்னார் – தலைமன்னார் வீதிப் பகுதியிலுள்ள மயானத்தில் இருந்து நேற்றையதினம் 15 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மன்னார் கத்தோலிக்கச் சபை நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, நேற்று மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
10 வருடங்களுக்கு முன்னர் மன்னார் கத்தோலிக்க சபையில் பணியாற்றிய கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட15 பேரின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மயானம் முன்னர் கத்தோலிக்கச் சபைக்கு சொந்தமானதாக காணப்பட்டு பின்னர் அப் பகுதியில் மரணிப்பவர்களின் உடல்களை புதைக்கும் மயானமாக அமைந்திருந்தது.
இந்தநிலையில் குறித்த 15 பேரின் உடல்களையும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, கத்தோலிக்க மயானத்தில் புதைக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைக்க அமையNவு மேற்படி உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் மீண்டும் அவை புதிய மயானத்தில் புதைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.