122
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கரைச்சி பிரதேச சபையினால் நேற்று முன்தினம் அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா எனும் பெயர் பலகை நேற்றிரவு இனந்த தெரியாதவா்களால் பிடுங்கி ஏறியப்பட்டுள்ளது.
இறுதியாக இடம்பெற்ற கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாவீரர் துயிலுமில்லங்களை தாவரவியல் பூங்காவாக மாற்றம் வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தாா்.
இதற்கு சமூகத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன. துயிலுமில்லங்கள் துயிலுமில்லமாகவே இருக்க வேணடும் என பொது மக்களும் மாவீரர்களின் உறவினர்களும் தெரிவித்திருந்தனர்.இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மற்றும் அரசின் அபிவிருத்தி திட்ட நிதி நாற்பது இலட்சம் ரூபாவில் துயிலுமில்லம் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றது.
இதற்கு தென்னிலங்கை அரசியல் கடும் எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரசிங்க உடனடியாக அபிவிருத்திப் பணிகளை நிறுத்துமாறு அறிவித்ததோடு, விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தாா்.
இதனையடுத்தே கரைச்சி பிரதேச சபையினரால் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் வளாகம் தாவரவியல் பூங்கா என பெயர் பலகை நாட்டப்பட்டிருந்தது. குறித்த பெயர் பலகையே நேற்றைய(04) தினம் இனந்ததெரியாத நபர்களார் பிடுங்கி எறியப்பட்டுள்ளது
இது குறித்து கரைச்சி பிரதேச சபை செயலாளர் கம்சநாதன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது
இந்த பெயர் பலகை கரைச்சி பிரதேச சபையினால் தான் நாட்டப்பட்டது எனவும் கரைச்சி பிரதேச சபை கீழ் அது தாவரவியல் பூங்கா என்று வருகின்றது எனவும் மற்றும் அண்மையில் நடைப்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இது தாவரவியல் பூங்கா என்று தீர்மானம் எடுக்கப்ப்பட்டதாகவும்
தாவரவியல் பூங்கா என்ற பெயரிலேயே இது தற்போது அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றமையால் அதனை தெழிவூட்டும் வகையில் கரைச்சி பிரதேச சபையினால் தான் இந்த பெயர் பலகை நாட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love