குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் உக்ரேய்னுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான உக்ரேய்ன் தூதுவர் இகோர் பொலிகா ( Igor Polika) க்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசத்திற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உடன்படிக்கை; கைச்சாத்திடப்பட்டுள்ளது
குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர அடிப்படையில் தகவல்களை பரிமாறுதல், கைதிகளை பரிமாறுதல் போன்ற விடயங்கள் குறித்து உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கைகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் நீதித்துறை மற்றும் குற்றவியல் துறை விடயங்களில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்வி, கலாச்சாரம், வர்த்தகம், முதலீடு போன்ற துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.