குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரசாயன பயங்கரவாதத்தை எதிர்க்க நடைமுறைச் சாத்தியமுடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இரசாயன ஆயுத தடை தொடர்பான நிறைவேற்றுப் பேரவையின் அமர்வுகளில் பங்கேற்ற இலங்கைப் பிரதிநிதிகள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.
இரசாயன ஆயுத பயன்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கு நடைமுறைச் சாத்தியமுடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த அமைப்பு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு அல்லாத தரப்புக்களின் ஆயுத பயன்பாடு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரசாயன ஆயுதப் பயன்பாட்டை தடுப்பதற்கு உலக நாடுகள் இணைந்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.