இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் 7000ற்கும் குறைவான பொதுமக்களே கொல்லப்பட்டதாக நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளமையானது அவருடைய சொந்த கருத்தே எனவும் பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல எனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஐலன்ட் நாளேட்டினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று வழங்கிய பதிலிலேயே இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
நேஸ்பி பிரபு பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் கருத்துக்கூறவில்லை எனவும் அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனது கருத்துக்களை தெரிவிப்பதற்கான உரிமையுள்ளது எனவும பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்; தெரிவித்துள்ளது.
அதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பபட்ட தீர்மானங்களை முழுமையான நடைமுறைப்படுத்துமாறு தாங்கள் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.