177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆர்ஜன்டீனால் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக கடத்தப்பட்ட பெண் குழந்தை குடும்பத்துடன் மீளவும் இணைந்து கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 40 வயதான அட்ரியானா என்ற பெண்ணே இவ்வாறு தமது குடும்பத்துடன் மீள இணைந்து கொண்டுள்ளார்.
மரபணு பரிசோதனைகளின் மூலம் குறித்த பெண் குடும்பத்துடன் இணைந்து கொண்டுள்ளார். கிரான்ட் மதேர்ஸ் (Grandmothers)என்ற அமைப்பினால் இந்த பெண் குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளார். ஆர்ஜன்டீனாவில் இராணுவ ஆட்சி இடம்பெற்ற காலத்தில் குறித்த, பெண் குழந்தை காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love