நவீன கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்ட புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் தன்னுடைய தொடர்பியல் கொள்கை குறித்து நான்கு பக்கங்கள் கொண்ட அறிக்கையை அறிவியல் அகடமிக்கு அனுப்பினார். அதன் வெற்றி குறித்த மகிழ்ச்சியை தனது நண்பர் மிச்சல் பெஸ்சோவிற்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.
20 நூற்றாண்டுகளில் தொடர்பியல் கோட்பாடுகள் இயற்பியலின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அவர் கையெழுத்திடப்பட்ட அந்த கடிதம் 30 ஆயிரம் டொலராகும். அந்த கடிதத்தில் பெர்லின் மற்றும் டிசம்பர் 10, 1915 என எழுதப்பட்டிருந்தது. மேலும் மிகவும் தைரியமான கனவு தற்போது நிறைவடைந்துள்ளது என ஐன்ஸ்டீன் எழுதியிருந்தார்.
அதேபோல் அவர் தனது நண்பருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு மொத்தமாக இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. 63 கடிதங்கள் கொண்ட தொகுப்பானது இணையத்தில் விற்கப்பட்டது.